இராணுவமும் பொலிஸாரும் இணைந்து வெலிமடை போகஹகும்புர பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் வெளிநாட்டில் பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் உள்ளடக்கிய சீ.டீ. ஒன்றும், சந்தேகத்திற்கிடமான மோட்டார் வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 13 பேரைக் கைது செய்துமுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (04) அதிகாலை முதல் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வெலிமடை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

