மக்களை கொன்று குவித்து விட்டு சஹ்ரான் சொர்க்கத்திற்கு சென்றுள்ள நிலையில் அவரது மனைவியை பார்ப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
இவ்வாறு செயற்படுபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்காமையினால் அரசாங்கம் மீது பேராயர் போன்றவர்கள் சந்தேகத்துடன் பார்க்கின்றார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அரச நிர்வாக கட்டமைப்பிற்குள்ளும் இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்கள் செயற்பட்டுள்ளன. ஆகவே அனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வந்து கண்காணிப்பதோடு நாடளாவிய ரீதியில் காணப்படும் தொளஹீத் ஜமாத் பள்ளிவாசல்களை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்லாம் மத அமைச்சு என்றில்லாது அனைத்து மதங்களையும் ஒரு அமைச்சின் கீழ் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு – 10 , டாலி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே தயாசிறி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

