Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விசமிகளால் அந்தோனியார் திருச் சொரூபம் உடைப்பு

May 2, 2019
in News, Politics, World
0

பள்ளகண்டல் புனித அந்தோனியார் தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச் சொரூபம் விசமிகளினால் உடைக்கப்பட்டுள்ளது.

வில்பத்து சரணாலயத்தில் மத்தியில் அமையப்பெற்றுள்ள புனித அந்தோனியார் யாத்திரிகை ஸ்தலமான ‘பள்ளகண்டல் புனித அந்தோனியார்’ தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச் சொருபம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இனம் தெரியாத விசமிகளினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

மிகவும் சிறப்பு மிக்க குறித்த தேவாலயத்தில் குறிப்பாக ஒவ்வொரு வருடமும் புனித அந்தோனியாரின் திருவிழாவை சிங்கள, தமிழ் மக்கள் ஒன்றினைந்து சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

சிலாபம் மறைமாவட்டத்தின் கீழ் குறித்த தேவாலையம் அமைந்துள்ளது.

குறித்த தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச் சொரூபம் உடைக்கப்பட்டுள்ளமை நேற்று மாலை தெரியவந்துள்ளது.

மக்கள் நடமாட்டமில்லாத நேரம் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரனைகளை அப்பகுதிக்கு பொறுப்பான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அடுத்த சில நாட்களுக்கு காற்றுடன் கூடிய மழை!

Next Post

ட்ரோன் கெமராவுடன் இளைஞர் கைது

Next Post

ட்ரோன் கெமராவுடன் இளைஞர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures