Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பங்களாததேஸ் நாட்டவர்கள் 4 பேரும் 3 இலங்கையரும் கைது

April 29, 2019
in News, Politics, World
0

மெதிரிகிரிய பொலிஸ் அதிகாரிகளினால் வீதிச் சோதனைச் சாவடியில் சந்தேகத்திற்கிடமான வாகனமொன்றைச் சோதனையிட்ட போது அதில் இருந்த பங்களாதேஸ் நாட்டைச் சேர்ந்த 4 பேரும், இலங்கையர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான முறையில் ஹிங்குரங்கொட பிரதேசத்திலிருந்து மெதிரிகிரிய நோக்கி பயணித்த இந்த வேனை சோதனையிட்ட போது அதிலிருந்து ஒரு தொகை வயர்களும், மின் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது மெதிரிகிரிய பிரதேசத்தில் உள்ள தொலைபேசி கோபுர திருத்தப் பணிக்காக வருகை வந்ததாக தெரியவந்துள்ளது.

வேனில் இருந்த பங்களாதேஸ் பிரஜைகளிடம் கடவுச் சீட்டுகள் காணப்பட்டதாகவும், இருப்பினும், நாட்டில் தற்பொழுதுள்ள பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு அவர்கள் இந்த தொலைபேசி திருத்தப் பணிகளுக்கு செல்வதாயின் பாதுகாப்பு அமைச்சிடமிருந்தோ அல்லது வேறு நிறுவனங்களிடமிருந்தோ எந்தவித அனுமதிப் பத்திரங்களும் பெற்றிருக்க வில்லையென்ற காரணத்தை வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மெதிரிகிரிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Previous Post

கல்முனை, சம்மாந்துரை, சவலகடை ஆகிய பகுதிகளுக்கு மாலை 6 மணி முதல் ஊரடங்கு

Next Post

புதிய பாதுகாப்புச் செயலாளராக முன்னாள் இராணுவத் தளபதி

Next Post

புதிய பாதுகாப்புச் செயலாளராக முன்னாள் இராணுவத் தளபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures