இலங்கையின் பாதுகாப்புத் துறை எந்த வகையிலும் குறைந்தது அல்லவென்பதை முழு உலகுக்கும் எடுத்துக் காட்டியுள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்பு விடயங்களில் வெளிநாட்டு பாதுகாப்புத் துறையை ஈடுபடுத்த எந்தவிதத் தேவையும் இல்லையென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
நாட்டின் பாகாப்புத் துறையில் சிறந்த அதிகாரிகளை சிறையில் போட்டுவிட்டு, அந்த இடைவெளிக்கு வெளிநாட்டிலிருந்து பாதுகாப்பு அதிகாரிகளை இறக்குமதி செய்யத் தேவையில்லையெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

