நியூஸிலாந்தின் கிறைஸட்சேர்ச் பிராந்தியத்தில் இடம்பெற்ற தாக்குதல்களின் எழுச்சியாக தீவிரவாதத்தை ன்னெடுப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளுக்கு நியூஸிலாந்தும் அமெரிக்காவும் தலைமை தாங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறைஸ்ட்சேர்ச் பிராந்தியத்தில் இரு பள்ளிவாசல்களில் கடந்த மார்ச் மாதம் துப்பாக்கிதாரியொருவரால் நடத்தப்பட்ட தாக்குதலில் 50 பேர் பலியாகியிருந்தனர்.
இந்நிலையில் அதனை அடிப்படையாகக் கொண்டு சமூக வலைத்தளங்கள் மூலம் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை தடுப்பது தொடர்பில் எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்திற்கு தானும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் தலைமை தாங்கவுள்ளதாக நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா அர்டேர்ன் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் உள்ளடக்கங்களை நீக்க நாடுகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் இணக்கப்பாட்டை பெற்றுக்கொள்வதை நோக்காகக் கொண்டே அந்தக் கூட்டம் நடத்தப்படுவதாக பிரதமர் ஜசிந்தா நியூஸிலாந்து வானொலிச் சேவைக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
தான் இது தொடர்பில் ஏற்கனவே தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த ஒரு தொகை லைமை நிறைவேற்றதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த மார்ச் 15 ஆம் திகதி இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்கள் சமூக வலைத்தளங்களில் முன்னொருபோதும் இல்லாதவாறு தீவிரவாத செயற்பாடுகளையும் வெறுப்புணர்வையும் தூண்டும் கருவிகளாக பயன்படுத்தப்பட்டுள்ளதை காணமுடிவதாக அவர் மேலும் கூறினார்.
“சமூக வலைத்தளங்கள் மக்களை பல்வேறு ஆக்கபூர்வமான வழிமுறைகளில் ஒன்றிணைக்க முடியும். ஆனால் அவற்றின் மூலம் கிறைஸ்ட்சேர்ச் தாக்குதல்களின் போது இடம்பெற்றதையொத்த வன்முறை காட்சிகளை வெளியிட்டு தீவிரவாத வன்முறைகளை தூண்டுவதற்கும் சாத்தியமுள்ளதால் அது தொடர்பில் மாற்றம் தேவையாகவுள்ளது” என அவர் குறிப்பிட்டார்.