Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமெரிக்காவின் தாக்கத்தை எதிர்கொள்ள தயார்- மத்திய அரசு

April 24, 2019
in News, Politics, World
0

ஈரானிய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு, அமெரிக்கா விதித்துள்ள தடையால் உண்டாகும் எத்தகைய தாக்கத்தையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளதென மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் எரிசக்தி மற்றும் பொருளாதார நலனைக் கருத்திற்கொண்டு அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளுடனும் கலந்துபேசி சுமூக தீர்வு காணப்படும் என்றும் மத்திய வெளிவிவகாரங்கள் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த, 2015ஆம் ஆண்டில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் முயற்சியால், ஈரான் அணுசக்தி தடை ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில், 2017ல் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், ஒப்பந்தத்தை மீறி, அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டினார்.

இதையடுத்து, ஒப்பந்தத்தை முறித்த டிரம்ப், 2018ஆம் ஆண்டு மே மாதம், ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகளை கொண்டுவந்தார்.

அத்துடன், இந்தியா, சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளும், நவம்பர் 4க்குள், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் எனக்கூறியிருந்தார். ஆனால், ஈராக், சவுதி அரேபியாவை அடுத்து, ஈரானிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்கவில்லை. எனினும், கச்சா எண்ணெய் இறக்குமதியை, ஆண்டுக்கு, 2.26 கோடி டன்னில் இருந்து 1.50 கோடி டன்னாக குறைக்க ஒப்புக்கொண்டது.

ஆனால், தன் பிடிவாதத்தை விட்டுக்கொடுக்காத டிரம்ப், இந்தியா, சீனா உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு மட்டும் ஆறு மாதங்களுக்கு ஈரானிய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய, சிறப்பு திட்டத்தின் கீழ் அனுமதி வழங்கினார்.

இந்த சலுகைக் காலம், மே 2ஆம் திகதியுடன் முடிவடைவதால், அடுத்து எந்த நாடும் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என, நேற்று முன்தினம் அமெரிக்கா அறிவித்தது. இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது.

Previous Post

கிறிஸ்ட்சர்ச் மசூதி தாக்குதலுக்கும் இலங்கை தாக்குதலுக்கும் தொடர்பில்லை – நியூசிலாந்து

Next Post

நைஜீரியாவில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து விபத்து

Next Post

நைஜீரியாவில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து விபத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures