இலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் தொடர்பான சந்தேகத்தில், தம்புள்ளயில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி மற்றும் மாவனெல்லை பகுதியைச் சேர்ந்த இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
தற்போதுவரை 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் சுமார் 228 பேர் வரை உயிரிழந்ததோடு, 450 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்யும் பொருட்டு, நாடளாவிய ரீதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.