வாழ்க்கையின் சவால்கள், போராட்டங்கள் என்பனவற்றின் இறுதி எதிர்பார்ப்பு குறித்து உயிர்த்த ஞாயிறு மிக முக்கிய பாடத்தை கற்றுத்தருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நபர்கள் என்ற வகையிலும் நாடு என்ற வகையிலும் சவால்மிக்க சூழ்நிலைகள் ஏற்படும்போது நம்பிக்கை ஒளிக்கீற்றுக்களைக் காண்பது போன்று அந்த சவால்களுக்கு முகங்கொடுத்து வெற்றியினூடாக பொது நலனைப் பெற்றுக்கொள்ள நாம் முயற்சிக்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வெளிச்சத்தை நோக்கிச் செல்லும் பாதை எவ்வளவு கடினமானதாகக் காணப்பட்ட போதிலும் அன்பு, அர்ப்பணிப்பு கொண்ட வாழ்வு மூலம் வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை இயேசுநாதர் எமக்கு எடுத்துக்காட்டியுள்ளாரென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.