தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இலங்கையர்கள் நான்கு பேர் பிரித்தானிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச விமான சேவைக்குச் சொந்தமான விமானம் ஒன்றில் லூடன் விமான நிலையத்தில் கடந்த புதன்கிழமை மாலை இவர்கள் தரையிறங்கியுள்ளனர். இவர்கள் மறுநாள் அந்நாட்டின் பயங்கரவாத தடுப்புப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவர்கள் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் என விமான சேவை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தெரியவந்ததன் பின்னர், 2000 ஆம் ஆண்டு பயங்கரவாத தடை ச் சட்டத்தின் 11 ஆம் சரத்தின் பிரகாரம் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை பிரித்தானிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

