‘பட்டி மற்றும் வீதி’ திட்டங்களின் ஊடாக இலங்கை உட்பட பல நாடுகளின் இறைமைக்கு பங்கம் ஏற்படுத்துவதுடன், அவற்றின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் சீனா செயற்படுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
சீனாவினால் பல கோடி அமெரிக்க டொலர் செலவில் முன்னெடுக்கப்படும் நவீன பட்டுப் பாதையின் ஆரம்ப முயற்சியின் மூலம் சர்வதேச ரீதியாக சிறப்பான கடற்படை ஒன்றினை தன்னிச்சையாக ஸ்தாபிக்கும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டுள்ளதாக கடற்படை அதிகாரி ஜோன் ரிச்சட்சன் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
‘பட்டி மற்றும் வீதி’ திட்டங்களின் ஊடாக ஏனைய நாடுகளின் உட்கட்டமைப்பு பணிகளுக்காக பல பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலை இலங்கை, பாகிஸ்தான், ஜிபோட்டி போன்ற நாடுகளுக்கு சீனாவினால் விஸ்தரிக்கப்படுவதுடன், தற்போது நேற்றோ உறுப்பு நாடுகளான கிரீஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளையும் அணுகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்றுக்கொள்ள முடியாத திட்டங்கள் மூலம் சீனா ஏனைய நாடுகளின் பொருளாதார பின்னடைவிற்கு வழியேற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

