Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டின் பல மாவட்டங்களில் இன்று 2 மணிக்குபின்னர் மழை பெய்யும்

April 12, 2019
in News, Politics, World
0

மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல், மேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சப்ரகமுவ, மத்திய, ஊவா, மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பிரதேசங்களில் பலத்த மின்னல் தாக்கத்திற்கும் சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்

சூரியனின் வடதிசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இன்று (12ஆம் திகதி) மதவாச்சி, பாளுகெட்டுவெவ, ஹொரவப்பொத்தானை மற்றும் சீனன்குடாஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.10 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Previous Post

ஏ-9 வீதியில் கோர விபத்தில் சிக்கிய வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்!

Next Post

ஹெரோயின் போதைப் பொருட்களுடன் வவுனியாவில் ஒருவர் கைது

Next Post

ஹெரோயின் போதைப் பொருட்களுடன் வவுனியாவில் ஒருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures