Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அவுஸ்திரேலியக் கடற்கரையில் அதிசய மீன்

March 20, 2019
in News, Politics, World
0

தெற்கு அவுஸ்திரேலியக் கடற்கரை ஒன்றில் இரண்டு மீனவர்கள் விநோதமான ஒரு மீன் கரையொதுங்கிய நிலையில் காணப்படுவதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்கள்

தமது மீன்பிடி வாழ்க்கையிலேயே அது ஒரு அதிர்ச்சிகரமான சம்பவமாக இருந்ததாக அவர்கள் பிரஸ்தாபித்துள்ளார்கள்

இந்த சம்பவம் தென் அவுஸ்திரேலியாவின் River Murray ஆற்றுமுகத்திலிருந்து கிழக்குப் பக்கமாக 25கிலோ மீட்டர்கள் தூரத்திலுள்ள கடற்கரையொன்றிலிருந்தே கண்டுபிடிக்கப்பட்டது கூல்வா பிபிகோ என்ற அந்த இடத்தில் மீன்பிடிக் குழு ஒன்றின் மேற்பார்வையாளரான ஸ்டீவன் ஜோன்ஸ் இந்த காட்சியைக் கண்டதாக தனது முக நூலில் பதிவேற்றினார்

உண்மையில் இந்த மீனை முதன்முதலாகக் கண்டபோது அது ஒரு பொய்யான உருவமோ என தான் நினைத்ததாக ஸ்டீவன் கூறுகிறார் சுமார் இரண்டரை மீட்டர் நீளமும் பல நூறு கிலோகிராமும் கொண்டதாக காணப்பட்ட அந்த மீனின் பெயர் சூரியமீன் (Sunfish) எனப்படுகிறது

பார்ப்பதற்கு மரத்துண்டு போல அசைவற்றுக் காணப்படும் தன்மைவாய்ந்ததாக விபரிக்கப்படுகிறது சூரியமீன்கள் அண்ணளவாக மூன்றுமீட்டர் நீளமும் நான்கரை மீட்டர் உயரமும் கொண்டதாக 2.5தொன்கள் எடை வரை வளர்வதாக அதுகுறித்த உயிரியல் குறிப்புக்கள் கூறுகின்றன

இவை உலகெங்கிலுமுள்ள வெப்பமண்டல கடல்களில் காணப்படுவதுடன் இவற்றின் துடுப்புக்கள் சுறாக்களை குழப்பமடைய வைப்பதாக கூறப்படுகிறது குறிப்பாக ஆசியாவின் சில பகுதிகளான ஜப்பான், கொரியா மற்றும் தைவான் போன்ற நாடுகளை அண்மித்த கடல்களில் இவை காணப்படுகின்றன

இந்த மீன்கள் கடலில் பெரும் படகுகளின் வருகையால் பெரும் ஆபத்தை எதிர் நோக்குவதாக கூறப்பட்டாலும் கடலில் தேங்கும் பிளாஸ்டிக் பொருட்களை ஜெல்லி மீன்களென நினைத்து உண்பதால் அபாயகரமான விளைவுகளை சந்திப்பதாக கூறப்பட்டுள்ளது இதனாலேயே இவை இறந்த நிலையில் கரையொதுங்குவதாக பெரும்பாலான மீனவர்கள் கூறுகிறார்கள்.

Previous Post

விபத்தில் காயமடைந்தவரை மருத்துவமனையில் சேர்த்த நீதிபதி

Next Post

ஐ.நாவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இலங்கை!

Next Post

ஐ.நாவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இலங்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures