எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ம் திகதி முதல் பிஸ்கட் உள்ளிட்ட அனைத்து இனிப்பு வகை பண்டங்களுக்கும் நிறக் குறியீடு குறிப்பிடப்படுவது கட்டாயமாக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.
எனவே இதன்படி, சீனி, உப்பு மற்றும் கொழுப்பு போன்றவற்றின் அளவை குறிக்கும் வகையில் நிறக் குறியீடுகள் கட்டாயமாக்கப்படவுள்ளது.இதற்கு முன்னர் குளிர்பாணங்களுக்கு மட்டுமே நிறக் குறியீடு பயன்படுத்தப்பட்டது.