யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் மனோகணேசன் சுன்னாகம் சந்தையில் மரக்கறி விற்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
மேற்படி பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் மனோகணேசன் யாழ்.குடாநாட்டுக்கு வருகைதந்துள்ளார். இதன்போது சுன்னாகம் மரக்கறி சந்தைக்கும் விஐயம் செய்திருந்தார்.
எனவே இதன்போது மரக்கறி விற்பனை செய்து கொண்டிரு ந்த வியாபாரி ஒருவரை எழுப்பிவிட்டு தான் அந்த இடத்தில் அமர்ந்து கொண்ட அமைச்சர் தனது நண்பர் பாஸ்கராவை நோக்கி, கொழும்பை விட யாழ்ப்பாணத்தில் பாகற்காய் மலிவு என கூறி விற்பனை செய்துள்ளார்.
மேலும் இந்த புகைப்படத்தை தனது முகநூலிலும் பதிவிட்டுள்ளார் அமைச்சர் மனோ