முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதியை வலியுறுத்தி ஜெனீவாவில் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 40வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிற நிலையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போரக்குற்றத்திற்கு நிலையான நீதி வேண்டும் என்றும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

