நாட்டில் உள்ள மக்கள் தொகையில் சுமார் 9 கோடி பேர் அரிதான நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரிதான நோய்க்கான இந்திய அமைப்பின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மருத்துவர் ராமையா முத்யாலா கூறி இருப்பதாவது: நம் நாட்டில் அரிதான நோய்க்கு முறையான வரையறை என்று எதுவும் இல்லை. நோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சமூகங்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அல்லது நோய் பற்றிய தகவல் மற்றும் சிகிச்சை குறித்த தகவல் இல்லாமல் உள்ளனர்.
அதே நேரத்தில் நோய்க்கான மருந்துகள் குறைவான அளவிலேயே கிடைக்கின்றன.மேலும் இம்மாதிரியான நோய்க்கான மருந்துகளை தயாரிக்க மருந்து நிறுவனங்கள் முன்வருவது இல்லை . உலகளவில் 7, ஆயிரம் வகையான அரிதான நோய்கள் காணப்படுகின்றன. ஆனால் 400-க்கும் மட்டுமே மருந்துகள் கிடைக்கின்றன. இப்பிரச்னைகளை எதிர்கொள்ள 5 சதவீதத்திற்கும் குறைவான மருந்துகளே உள்ளன.
அரிதான நோய் மரபணு காரணமாக இருப்பதால் அவை பரம்பரையாக இருக்கலாம். குறிப்பிட்ட குடும்பங்களை அடையாளம் காணவும், மரபணு ஆலோசகரை பார்க்கவும், நோயை பற்றி அவர்களுக்கு கற்று கொடுப்பது மட்டுமே நோயை கண்டறிவதற்கான வழி என கூறி உள்ளார்.
மருத்துவர் கிருஷ்ணாஜிராவ் கூறுகையில் அரிதான நோயின் சுமை டி.பி போன்ற நோய்களின் சுமையை விட பல மடங்கு அதிகமாக உள்ளது. மற்ற நோய்களுக்கு மருந்துடன் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் குணப்படுத்த முடியும். ஆனால் அரிதான நோய்களின் சூழ்நிலை முற்றிலும் வேறுபட்டதாக அமைகிறது. இதில் நோயாளி மட்டுமல்லாது குடும்ப உறுப்பினர்களும் பாதிக்கப்படுகின்றனர்.என கூறி உள்ளார்.

