அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்கிய எப் – 16 ரக விமானத்தை பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் கடந்த மாதம் 27 ஆம் தேதி எப் – 16 ரக விமானத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியதாக இந்தியா தெரிவித்தது.
இந்த விமானத்தைதான் இந்திய விமானி விங்க் கமாண்டர் அபிநந்தன் சுட்டு வீழ்த்தியதாக இந்திய தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து, இந்தியா தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வரும் நிலையில், பாகிஸ்தான் நிராகரித்து வருகிறது.
இந்நிலையில், இதனை ஆராய்ந்து வருவாகவும், மேலும் சில தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இது தொடர்பாக பேட்டியளித்த துணை ஏர் மார்ஷல் ஆர்.ஜி.கே. கபூர், ராஜோரி பகுதியில் கிடைத்த பாகங்கள் ” அம்ரான்” எனும் அதி நவீன ஏவுகணை என்றும், பாகிஸ்தானின் எப் 16 ரக விமானத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

