பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சட்டார் எனும் பகுதியில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் பயணித்த வாகனத்தின் மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர், பலத்த காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ” பலூச் விடுதலை புலிகள் ” எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் மீரான் பலூச், ” பாகிஸ்தான் ராணுவ வாகனத்தின் மீது கனரக ஆயுதங்கள் மற்றும் ராக்கெட் மூலம் 2 மணி நேரத்திற்கு தாக்குதல் நடத்தப்பட்டது ” என தெரிவித்துள்ளார்.

