இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், ” நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை மிட்சப்படுத்தும் நோக்கத்தில், தென் கொரியா உடனான ராணுவ பயிற்சியை நான் விரும்பவில்லை. மேலும், வடகொரியா உடன் சுமூக உறவை கடைபிடிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது ” என தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா- தென் கொரியா பாதுகாப்பு படைகள் இன்று முதல் 9 நாட்களுக்கு போர் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என அமெரிக்க பாதுகாப்புத்துறை முன்னரே தெரிவித்த நிலையில், அதிபரின் இந்த பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கொரிய தீபகற்பத்தில் ராணுவ கூட்டு பயிற்சியை அமெரிக்கா மற்றும் தென் கொரியா மேற்கொள்ள கூடாது என வட கொரியா தொடர்ந்து தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

