இந்திய விங் கமாண்டர் அபிநந்தன், நான்கு மணிநேர கால தாமதத்திற்குப் பிறகு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னணி குறித்த ‘திடுக்’ தகவல் வெளியாகியுள்ளது.
அமைதி, நல்லெண்ண முயற்சியாக, விமானி அபிநந்தனை விடுதலை செய்வதாக பாக். பிரதமர் இம்ரான் கான்(பிப்.28) அறிவித்தார். தி்ட்டமி்ட்டபடி நேற்று (மார்ச்-1) மாலை 5.20 மணிக்கு இந்தியா-பாக். வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்ட அபிநந்தனிடம் இந்திய மீடியாக்கள் பேட்டிக்கான ஆர்வமுடன் காத்திருந்தனர். எனினும் சரியாக இரவு 9.17மணிக்குதான் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இடைப்பட்ட நேரத்தில் பாக்., செய்த குள்ளநரித்தனம் வெளிப்பட்டுள்ளது.
இதனால் வீடியோவை பல முறை கட் செய்யப்பட்டும், எடிட் செய்யப்பட்டும் பாகிஸ்தான் தயார் செய்துள்ளது தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உலக அரங்கில் அதன் இமேஜை உயர்த்த பொய் பிரசாரத்தை மேற்கொள்ள பாக். அரசு அந்த வீடியோவை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப உத்தரவிட்டது. அதன்பிறகு அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. இதன் மூலம் அபிந்நதன் விடுதலையில் குறுக்கு புத்தியை பயன்படுத்தியுள்ளது பாகிஸ்தான் அரசு.