காணாமல் போனவர்கள் தொடர்பாக புதிய ஆணைக்குழுக்களை அமைப்பதால் எந்தப் பயனும் இல்லை என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
சுஹூருபாயவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“காணாமல் போனவர்கள் தொடர்பாக புதிய ஆணைக்குழுக்களை அமைப்பதைவிடுத்து முதலில் காணாமல் போனவர்களுக்கான சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பரணகம மற்றும் உடலாகம ஆணைக்குழுக்களின் தகவல்களைப் பெற்று காணாமல் போனோருக்கான சான்றிதழ்களை வழங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்.
மேலும் யுத்த பாதிப்புக்குள்ளான மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக அதற்கான செயற்திட்டமொன்றினைத் தயாரித்து ஐ.நா.விற்கு அனுப்பி வைக்கவேண்டும்” என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.