நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு முன்னோக்கி எடுத்துச் செல்வது என்பது பற்றி சகலரும் சிந்தித்துச் செயற்பட வேண்டியுள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தப் பணி சவாலானதாக இருந்தாலும் கூட அதனை ஏற்று முன்னோக்கி பயணிக்க வேண்டும். அதுவே நாட்டின் தற்போதைய தேவையாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சர் மங்கள சமரவீரவின் 30 வருட கால அரசியல் வாழ்வின் நிறைவினையொட்டி நேற்று (28) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

