கோண்டாவில் மேற்கு நந்தாவிலை சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .
பாரவூர்திகளில் வரும் இரும்பு பொருள்களை இறக்கும் வேலை செய்யும் இவர் நேற்றைய தினம் உடுவில் பகுதியில் தனது வழமையான பணிக்கு சென்றுள்ளார் .பாரவூர்தியில் கொண்டு வரப்பட்ட இரும்பு கம்பிகளை இறக்க தயாரான போது – பாரவூர்தி கதவுகளை திறந்த இளைஞன் மீது பொரிந்து விழுந்த கம்பிகள் அவரை குத்தி கிழித்து சம்பவ இடத்திலேயே உயிரை பறித்துள்ளது .
இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
பணியாளர் மீது அக்கறை இல்லாது தான்தோன்றித்தனமாக வேலை வாங்கும் இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விசனம் அடைகின்றனர் .