போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையைப் பெற்றுக்கொடுப்பதற்கு விசேட நீதிமன்ற கட்டமைப்பொன்றை உருவாக்கி மக்கள் எதிர்பார்க்கும் தீர்ப்பினைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென பேராசிரியர் அகுரடியே நந்த நாயக தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறியுள்ளார்.
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும். அதுபோன்று மிக இலகுவில் நீதிமன்ற தீர்ப்புக்களை நடைமுறைப்படுத்தவும் முடியாது.
இதற்கு முன்னர் எப்போதும் இல்லாத வகையில் போதைப்பொருள் பாவனை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் தேரர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சந்திப்பில் பேராசிரியர் அகுரடியே நந்த நாயக தேரர், கொடபல அமரகித்தி நாயக தேரர், கிவுலே கெதர நாரத நாயக தேரர், பல்லேகந்தே ரதனசார அனுநாயக தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.