மட்டக்களப்பின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து இன்று 3 சடலங்களை காவற்துறையினர் மீட்டுள்ளனர்.
ஆயித்தியமலைப் – மகிழவெட்டுவான் கற்குடா பிரதேசத்தில், கிணறொன்றில் இருந்து 49 வயதுடைய ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனது சகோதரியின் பராமரிப்பில் இருந்து வந்த ஒருவர் என எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஏறாவூர் – வந்தாறுமூலை பிரதான வீதியை அண்மித்த கடையொன்றிலிருந்து 25 வயதுடைய இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் காவற்துறையினர் குறித்த சடலத்தை மீட்டு செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த சலடம் இன்று காலை மீட்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் 60 வயது மதிக்கதக்கவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், காத்தான்குடி காவற்துறையினர் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.