உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் யோசனையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் உள்ள பாதுகாப்பு அமைச்சு இழுத்தடிப்பு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தியில், பாதுகாப்பு அமைச்சு இதுவரையில் தமது கருத்தை அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கவில்லை.
இதனால் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் யோசனை கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் யோசனை அடங்கிய அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை இரண்டு வாரங்களுக்கு முன்னர், அமைச்சரவையில் முன்மொழிந்திருந்தார்.
பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைகளுக்காக, இந்த அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒத்திவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.