ஜம்மு காஷ்மீர் புல்வாமா தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய விவசாயிகள் எடுத்த நடவடிக்கையால், பாகிஸ்தானில் தக்காளி விலை ‘விர்’ரென எகிறி, கிலோ ரூ.250-க்கு விற்பனையாகிறது.
புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு இத்தாக்குதலுக்கு காரணம் என்பது கண்டறியப்பட்டது.
மத்திய பிரதேச மாநிலம், டெல்லியில் இருந்து பாகிஸ்தானுக்கு தினசரி 70 லாரிகளில் தக்காளி மற்றும் இதர காய்கறிகள் செல்லும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தினசரி 3 ஆயிரம் டன் தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டது. தற்போது, புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விவசாயிகள் அந்நாட்டிற்கு தக்காளி மற்றும் காய்கறிகளை ஏற்றுமதி செய்வதை நிறுத்தி விட்டனர். இதனால், தற்போது, அங்கு அனைத்து காய்கறிகளின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.