ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய விமானப்படை இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது.இதில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றத்தை தணிப்பது அவசியமாகிறது. இரு நாடுகளுடன் சமரசம் குறித்து ஐரோப்பிய யூனியன் நடவடிக்கை எடுத்து வருவதாக ஐரோப்பிய யூனியன் செய்தி தொடர்பாளர் மஜா கோசிஜானிக் தெரிவித்துள்ளார்.