இந்திய விமானப்படை தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். இதற்கிடையில் பாக்., பார்லி.,யில் இம்ரான்கானுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை துவங்க கூடாது என எம்.பி.,க்கள் குரல் எழுப்பினர்.
பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தனது ஜப்பான் பயணத்தை ரத்து செய்தார். தொடர்ந்து, அவர் சீன வெளியுறவு அமைச்சகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாக்குதல் குறித்து எடுத்து கூறினார்.
தாக்குதல் தொடர்பாக குரேஷி கூறுகையில், இது போன்ற தாக்குதலில், இந்தியா ஈடுபட போகிறது என நாங்கள் உலக நாடுகளிடம் சொல்லி வந்துள்ளோம். இன்று இந்தியா தாக்குதலில் ஈடுபட்டது. இது விதிகளை மீறிய செயல். இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து , பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவசர ஆலோசனை நடத்தினார்.