பேராதனை பல்கலைக்கழகத்தின் கிளையொன்று மாலைதீவில் நிறுவப்பட நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் உபுல் பி. திசாநாயக்க அறிவித்துள்ளார்.
அதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆவணங்கள் பரீசீலனைக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வெளிநாட்டு மாணவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்திடமிருந்து பட்டங்களைப் பெறுவதற்கு வசதியேற்படுத்திக் கொடுப்பதற்காகவே மாலைதீவில் கிளை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.