North East Premier League வடக்கு கிழக்கு உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது நிர்வாகக்கூட்டம் கடந்த 19ம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள IBCதமிழ் தலைமைக்காரியாலயத்தில் தமிழர் உதைபந்தாட்ட கழகத்தின் இயக்குனர் பாஸ்கரன் அவர்களது தலைமையில் நடைபெற்றுள்ளது.
கூட்டத்தில் தமிழர் உதைபந்தாட்ட கழக இயக்குனர்களும் (Board of Directors TFF) வடக்கு கிழக்கு உதைபந்தாட்ட கழக (MEPL Committee) நிர்வாக அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த கலந்துரையாடலில் 2019ம் ஆண்டிற்கான உதைபந்தாட்டப் போட்டிக்குரிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. அத்துடன் NEPL போட்டியின் வீரர்களுக்கான ஏலம் சம்மந்தமாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டிற்கான போட்டிக்குரிய காலம், போட்டி நடைபெறும் மைதானங்கள் பற்றிய இறுதித் தீர்மானங்கள் நடைபெறவுள்ள அணி உரிமையாளர்களது (Owners Meeting) கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படும்.
இம்முறை போட்டிகள் சென்ற ஆண்டினைவிட மிகவும் பிரமாண்டமாண்டமான ஏற்பாடுகளுடன் தாயகத்தின் சகல மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது.
இலங்கையின் அதிகூடிய பரிசுத் தொகையினைக் கொண்ட ஓரே போட்டித்தொடர் இதுவாகும்.
போட்டித் தொடருக்கான பிரதான அனுசரணையாளராக IBCதமிழ் உள்ளது.
முதலாவது பரிசு ரூபா ஐம்பது இலட்சம்.
இரண்டாவது பரிசு முப்பது இலட்சம்
மூன்றாவது பரிசு பதினைந்து இலட்சம்
நான்காவது பரிசு ஐந்து இலட்சம்.
சென்ற ஆண்டிற்கான முதலாம் பரிசினை தொழின்முறை உதைபந்தாட்டக் கழகமான TILKO Conquerors FC கழகம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

