Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம்

February 23, 2019
in News, Politics, World
0

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்தின் தேர்தலுக்கு முந்தைய மத்திய வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிடப்படவுள்ளது.

மார்ச் மாதம் 19 ஆம் திகதி வரவு செலவுத் திட்த்தை முன்வைக்கவுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் பில் மோர்னியோ தெரிவித்துள்ளார். லிபரல் அரசாங்கம் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த நிலையில், இதுவரை மூன்று வரவு செலவுத் திட்டங்களை முன்வைத்துள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கனேடிய மத்திய பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த அரசாங்கத்தின் நான்காவது வரவு செலவுத் திட்டமாகவும், தேர்தலுக்கு முந்தைய பாதீடாகவும் இது அமையவுள்ளது.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்நாட்டிலேயே பொருட்களை கட்டுப்படியான விலையில் மக்கள் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யும் திட்டங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் அதில் மருத்துவ உதவித் திட்டங்கள் தொடர்பிலும் சாதகமான அம்சங்கள் காணப்படும் என்ற சமிக்ஞையையும் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை தற்போது வேலைகளின் தன்மைகள் அதி வேகமாக மாறிவரும் சூழ்நிலையில், பணியாளர்கள் தம்மை அதற்கோற்றவாறு தயார் படுத்திக் கொள்வதற்கான பயிற்சி நிதியினை இந்த அறிக்கை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post

சோழர்காலத்திற்குரிய சிவன் ஆலயத்திலிருந்து இலங்கையின் வரலாற்று சான்றுகள் சில மீட்பு

Next Post

கூட்டணி தொடர்பில் பசில் ராஜபக்ஷ எந்தவித இழுத்தடிப்புக்களையும் மேற்கொள்வதில்லை

Next Post

கூட்டணி தொடர்பில் பசில் ராஜபக்ஷ எந்தவித இழுத்தடிப்புக்களையும் மேற்கொள்வதில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures