Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சர்வதேச முதலீடுகளே இன்றும் நாட்டுக்கு வருகின்றது

February 21, 2019
in News, Politics, World
0

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் செய்துகொண்ட சர்வதேச முதலீடுகளே இன்றும் நாட்டுக்கு வருகின்றதே தவிர, இந்த ஆட்சியில் சர்வதேச முதலீடுகளை மேற்கொள்ள எவரும் முன்வரவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் தலைமையில்  புதன்கிழமை  கூடிய நாடாளுமன்ற அமர்வில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி கட்டளைச்சட்டத்தின் ஒழுங்குவிதிகளை அங்கீகரிப்பது மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் முதலீடுகள் குறித்து இன்று விவாதம் நடத்தப்பட்டாலும் கூட இந்த ஆட்சியில் பாரிய முதலீடுகள் எவையும் கொண்டுவரப்படவில்லை.

ஒரு சில சர்வதேச முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வந்தாலும் கூட அவர்கள் எதோ ஒரு அச்சம் காரணமாக திரும்பி சென்று விடுகின்றனர்.

ஒரு சில சந்தர்ப்பங்களில் கப்பம் கேட்கும் நிலைமையும் உள்ளது. இந்த ஆட்சிக் காலத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் எவரும் இலங்கைக்கு வராததற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான முரண்பாடுகளே காரணமாகும்.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் செய்துகொண்ட பாரிய வேலைத்திட்டங்கள் மூலமாக இணங்கிய சர்வதேச முதலீட்டாளர்கள் தான் இன்றும் நாட்டில் முதலீடுகளை செய்து வருகின்றனர்.

குறிப்பாக துறைமுக நகர் மற்றும் சங்கிரில்லா போன்ற வேலைத்திட்டங்களின் மூலமாக நாம் கொண்டுவந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மட்டுமே இன்றும் செயற்பட்டு வருகின்றனர்.

இந்த ஆட்சியில் ஒருசில சில்லறைத்தனமான முதலீடுகளை பிடித்துக்கொண்டு இவர்கள் மார்தட்டிக்கொள்ளும் நிலைமையே உள்ளது.

ஹொரண டயர் நிருவனம் குறித்து மட்டுமே இவர்களால் பேச முடிந்துள்ளது. ஆயிரம் பில்லியன் வேலைத்திட்டம் ஒன்று கூட இவர்கள் செய்யவில்லை.

அவ்வாறான பாரிய முதலீட்டாளர் ஒருவரை இந்த அரசாங்கத்தால் நாட்டுக்கு கொண்டுவர முடியாது” என கூறினார்.

Previous Post

ஊழல் முறைகேடுகள்-ஆரம்பகட்ட விசாரணை நடவடிக்கைக்காக விசேட பொலிஸ் குழு

Next Post

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப தமிழர் தரப்பிலிருந்துதான் பங்களிப்பு அவசியம்

Next Post

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப தமிழர் தரப்பிலிருந்துதான் பங்களிப்பு அவசியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures