Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பெரிய மனிதருக்கு பெரியமனிதர் கொடுத்த மரியாதை

February 21, 2019
in News, Politics, World
0

1972 இல் ஒரு தனிமனிதனாக மொழியுரிமைப் போராட்டத்தில் சர்வதேசம் வரை சென்ற  சிரேஸ்ட சட்டத்தரணி செல்லையா கோடிஸ்வரனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளம்செழியன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கொழும்பில் 85 வது வயதில் காலமான அமரர் கோடிஸ்வரனின் இறுதி கிரிகைகள் உவர் மலை 22 இராணுவத்தலைமையக வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றுள்ளது.

திருகோணமலை இந்து மயானத்தில் நேற்று மாலை உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரது உடலம் வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு சென்ற நீதிபதி தனது அஞ்சலி செலுத்தியதுடன் உறவினர்களுக்கு தனது ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

தமிழர் மொழியுரிமைப்போராட்டத்தில் அழியாத இடத்தை பிடித்த இவர் தனிச்சிங்கள மொழிச்சட்டத்தில் பாதிக்கப்பட்ட உத்தியோகதத்தர்கள் சார்பாக இலங்கை மேல்நீதிமன்றத்தில் வழக்கு நிராகரிக்கப்பட்ட நிலையில் லண்டன் மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இறுதி அஞ்சலி நிகழ்வில் ரெலோ கட்சியின் முக்கியஸ்தர்களான சட்டத்தரனி ஸ்ரீஸ்காந்தா,சிவாஜிலிங்கம், தமிழரசுகக்கட்சியின் மாவட்டத் தலைவர் ஏ.குகதாசன்,மற்றும் வைத்திய அதிகாரிகள்,பொது அமைப்பு பிரதிநிதிகள்,சட்டத்தரணிகள் என பலரும் வருகை தந்து அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

யாழில் வண்ணமயமாக மாறிய வானம்!

Next Post

திருட்டு அலைபேசி ஒன்றினை வைத்திருந்தவருக்கு விளக்க மறியல்

Next Post

திருட்டு அலைபேசி ஒன்றினை வைத்திருந்தவருக்கு விளக்க மறியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures