Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தர முடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

February 20, 2019
in News, Politics, World
0

காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தர முடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு ஐநாவிடம் இலங்கை விடயத்தில் மேலும் கால அவகாசம் வழங்குமாறு கோர முடியும் அதற்கு இவர்கள் யார்? என மன்னார் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் இணைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

இதன் போது அவர்கள் மேலும் தெரிவித்தாவது, எங்களது போராட்டம் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் நிறைவுப் பெற்றுள்ளன. இதுவரைக்கும் காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகளுக்கு எவ்வித நீதியும் கிடைக்கவில்லை. கிளிநொச்சி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அலுவலகத்திற்கு சில வருடங்களுக்கு முன் பிரதமர் ரணில் வருகை தந்திருந்த போது சொன்னார் மகிந்தவின் பிள்ளைகள் காணாமல் போயிருந்தால் அவர்கள் இப்படியிருப்பார்களா? எனவே நான் பதவிக்கு வந்தவுடன் உங்களுக்கு தீர்வை தருவேன் என்றார்.

இதன்போது பிள்ளை காணாமல் ஆக்கப்பட்ட தாய் ஒருவர் அவரின் காலில் வீழ்ந்து கதறி அழுதார் தனது ஒரேயொரு மகனை மீட்டுத்தருமாறு. ஆனால் பதவிக்கு வந்த ரணில் காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிரோடு இல்லை என யாழப்பாணத்திலும், மறப்போம் மன்னிப்போம் என கிளிநொச்சியிலும் தெரிவித்துள்ளார்.

இவர் இவ்வாறு தெரிவித்து போது எங்களது வாக்குகளால் பதவிக்கு வந்த பிரதிநிதிகள் வாய் மூடி மௌனமாக இருந்துள்ளனர். அது மாத்திரமன்றி கடந்த காலத்தில் நடந்துகொண்டது போன்று தற்போதும் இலங்கை விடயத்தில் ஐநாவுக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளனர் எனத் தெரிவித்த அவர்கள் நாம் இனியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை நம்பத் தயாரில்லை என்றும் தெரிவித்தனர்.

அத்தோடு தாம் எதிர்வரும் 25 திகதி நடத்தவுள்ள மாபெரும் போராட்டத்திற்கு பூரண ஆதரவினை வழங்குமாறும் அனைத்து அரசியற் கட்சிகள், தொழிற்சங்கங்கள், பொது மக்கள் ஆகியோரிடம் கோரியும் நிற்கின்றனர்.

Previous Post

ஐ.நா. தீர்மானத்தை செயல்படுத்த மீண்டும் கால அவகாசம்

Next Post

இலங்­கை­யின் இறு­திப் போரில் போர்க்­குற்­றங்­கள் இடம்­பெ­ற­வில்லை

Next Post

இலங்­கை­யின் இறு­திப் போரில் போர்க்­குற்­றங்­கள் இடம்­பெ­ற­வில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026
தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

June 19, 2026
தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures