Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘கென்னடி கிளப்’ படம்; கபடிதான் கதைக் களம்

February 17, 2019
in Cinema
0

விளையாட்டுப் போட்டிகள் மீது அப்படியொரு ஆர்வம் இயக்குநர் சுசீந்திரனுக்கு. அதனாலேயே, விளையாட்டுப் போட்டிகளை மையமாகக் கொண்டு திரைப் படங்களை உருவாக்கி வருகிறார். மீண்டும் கபடியைக் கதைக்களமாகக் கொண்டு புதிய படத்தை இயக்கி வருகிறார்.

‘கென்னடி கிளப்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. சசிகுமார், பாரதிராஜா ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சூரி, முனீஸ்காந்த், மீனாட்சி, காயத்ரி, நீது, சுமித்ரா, சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

‘பாண்டிய நாடு’, ‘பாயும் புலி’ மற்றும் ‘மாவீரன் கிட்டு’ உள்ளிட்ட படங்களுக்கு பிறகு சுசீந்திரன் இயக்கும் இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கிறார்.

சுசீந்திரனின் குடும்பமும் கபடி பின்னணியைக் கொண்டது. அவரது அப்பா, கபடி பயிற்சியாளராக இருந்துள்ளார். ‘வெண்ணிலா கபடிக் குழு’ என்ற முதல் படத்திலேயே கபடிப் போட்டியில் பங்கேற்கும் கிராமத்து வீரர்களை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைத்திருந்தார். தற்போது அவர், ‘கென்னடி கிளப்’ படத்தை பெண்கள் கபடியை மையமாகக் கொண்டு உருவாக்கி வருகிறார். நடிகர், நடிகைகளோடு கபடி வீராங்கனைகளும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

Previous Post

ஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல: சாயிஷாவின் அம்மா

Next Post

காதலர் படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி

Next Post

காதலர் படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures