Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சர்வதேச உதவியுடன் போர்க்குற்ற விசாரணை – சி.வி.விக்னேஸ்வரன்

February 17, 2019
in News, Politics, World
0

சர்வதேச உதவியுடன் போர்க்குற்ற விசாரணை நடத்தி இலங்கையில் நடந்தவை இனப்படுகொலையா என்பதை முதலில் அறிந்து கொண்ட பின்னரே இந்த அரசாங்கத்தை மன்னிப்போம் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், வட.மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

 

யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் அலவலகத்தில் இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த போது கடந்தகாலத் தவறுகளை மறந்து செயற்படுவோம் எனக் கூறியிருந்தார்.

அத்துடன், கடந்தகாலத் தவறுகளை மன்னித்து மறந்து விடுங்கள். பழையனவற்றை மறந்து விடுங்கள். உண்மையைக் கண்டறிய முனையாதீர்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதாவது அபிவிருத்திகள் எனும் போர்வையில், உங்களுக்குப் பணம் தருகின்றோம், உங்கள் உறுப்பினர்களுக்கு சலுகைகள் தருகின்றோம். உங்கள் பொருளாதார விருத்திக்கு அடி சமைக்கின்றோம். நடந்து போனதை மறந்து விடுங்கள் – மன்னித்து விடுங்கள் என்று தான் கூறுகின்றார்.

இதன் அர்த்தம் என்ன? ஜெனிவாவில் கேள்வி கேட்கப் போகின்றார்கள். நாம் செய்வதாகக் கூறியவற்றை இதுவரை செய்யவில்லை. இப்போது உங்களுக்கு சலுகைகளைக் கொடுக்க எண்ணியுள்ளோம். கட்சி ரீதியாக அதைச் செய்ய எண்ணியுள்ளோம்.

எனவே ஜெனிவாவில் மீண்டும் கால அவகாசம் பெற்றுக் கொடுங்கள் என்று பிரதமர் கூறிச் சென்றுள்ளார். இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனமாகத் தலையசைத்ததைப் பார்த்தால் அதற்கு அவர்கள் தயாராகி விட்டதாகவே தெரிகின்றது.

ஆனால் முதலில் சர்வதேச உதவியுடன் இலங்கையில் போர்க்குற்ற விசாரணையை நடத்தி, இங்கு இடம்பெற்றது இனப்படுகொலை ஆராய்ந்து கொள்ள வேண்டும். அதன் பின்னரே மன்னிப்புத் தொடர்பாக நாம் ஆராய முடியும்” என சி.வி.விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

மத்திய மாகாண முதலமைச்சின் செயலாளர் நியமனம்

Next Post

வவுனியாவில் ஆட்கள் இல்லாதவீட்டில் நடந்த சம்பவம் – கிராமம் பரபரப்பில்

Next Post

வவுனியாவில் ஆட்கள் இல்லாதவீட்டில் நடந்த சம்பவம் - கிராமம் பரபரப்பில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures