ஆபத்தான போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள அமைச்சர்கள் தொடர்பில் பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ள அறிவிப்பு குறித்து கவனம் செலுத்துமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இது தொடர்பில் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி அவர்களே, நீங்கள் தற்பொழுது போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். உடனடியாக ரஞ்ஜன் ராமநாயக்கவை பிடித்து விசாரணை நடாத்துங்கள். அவர் சொன்ன கருத்துக்கு ஆதாரம் இருப்பதாயின், சம்பந்தப்பட்ட அமைச்சர்களை கைது செய்யுங்கள். இல்லாவிடின், ரஞ்ஜன் ராமநாயக்கவைக் கைது செய்யுங்கள் எனவும் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டார்.
இவ்வாறு அமைச்சர்கள் கைது செய்யப்படுமாயின் ஏனையவர்கள் தானாக ஒதுங்கிக் கொள்வார்கள் எனவும் அவர் மேலும் கூறினார்.

