தெற்காசிய பிராந்திய தூய்மைப்படுத்தல் மாநாடு கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் 21ஆம் முதல் 23ஆம் திகதி வரையான மூன்று நாட்களுக்கு கொழும்பில் இந்த மாநாடு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாநாட்டின் போது தெற்காசிய பிராந்தியலுள்ள நோய்கள், நீர் மற்றும் சுகாதார வசதிகளிலுள்ள பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வருட மாநாட்டில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த மாநாடு இறுதியாக பங்களாதேஷின் டாக்காவில் 2016ஆம் ஆண்டு நடைபெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

