Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இராணுவ முகாமுக்கு முன்னால் வைத்து இளைஞன் மீது இராணுவம் தாக்குதல்

February 16, 2019
in News, Politics, World
0

வவுனியா, ஈச்சங்குளம் இராணுவ முகாமுக்கு முன்னால் வைத்து இளைஞன் ஒருவர் மீது இராணுவத்தினர் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கல்மடு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் ஈச்சங்குளம் இராணுவ முகாமின் முன்னால் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடி விட்டு அதன் முன்னால் இராணுவத்தினர் நடத்தும் சிற்றுண்டிச் சாலைக்கு சென்ற சமயம், அங்கு நின்ற இராணுவ வீரர் ஒருவருக்கும், இளைஞர் ஒருவருக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் நின்ற இராணுவத்தினர் ஒன்றிணைந்து தன்மீது தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்ட இளைஞன் தெரிவித்துள்ளார்.

இதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த ஈச்சங்குளம் பொலிசார் குறித்த இளைஞனை கைது செய்துள்ளதுடன், இராணுவத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட இளைஞனின் தாயார் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்குள்ளான இளைஞன் ஈச்சங்குளம் பொலிசாரால் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பின்னர் மீண்டும் பொலிசாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் ஈச்சங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

பல தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞரை கைது செய்யாத கோப்பாய் பொலிசார்

Next Post

வவுனியா வளாகத்தை தனி பல்கலைக்கழகமாக மாற்றும் வர்தமானி

Next Post

வவுனியா வளாகத்தை தனி பல்கலைக்கழகமாக மாற்றும் வர்தமானி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures