தேசிய அரசாங்கத்தினை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்வசமுள்ள அமைச்சுப் பொறுப்புக்களைத் துறக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அரசாங்கம் குறித்து கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் தலைவராக இருப்பதோடு, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சினையும் தன்வசம் கொண்டுள்ளார்.
தேசிய அரசாங்கத்தினை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்வசமுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பொறுப்புக்களை அவர் துறக்க வேண்டும்.
மக்களுக்குச் சேவை செய்ய ஆர்வமுள்ள தலைவர்களுக்கு அந்த அமைச்சுக்களை வழங்கி அவர்களைச் சுதந்திரமாகச் செயற்பட அனுமதிக்க வேண்டும்” அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

