Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறையிலுள்ள மதூஷ் குழுவை கண்காணிக்க டுபாய் அமைப்பொன்று தயார்

February 15, 2019
in News, Politics, World
0

டுபாயில் கைது செய்யப்பட்டு மத்திய பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மதூஷ் குழுவை கண்காணிப்பதற்கு “டிடேன் இன் டுபாய்” முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டுபாயில் கைது செய்பவர்களை கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் ஒரு அமைப்பாக டிடேன் இன் டுபாய் அமைப்பு செயற்படுகின்றது.

போதைப் பொருள் வியாபாரம் தொடர்பில் டுபாயில் கைது செய்யப்படுபவர்கள் குறித்து டுபாய் பொலிஸார் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன. கைது செய்யப்படுபவர்கள் தொடர்பில் விசாரணைகள் திருப்திகரமாக இடம்பெறுவதில்லையெனவும், இதனால், குற்றம் செய்யாதவர்களும் சிறைப்படுத்தப்பட வாய்ப்பு ஏற்படுவதாகவும் டிடேன் இன் டுபாய் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளதாக டுபாயிலுள்ள இலங்கையர்களின் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

போதைப் பொருள் வழக்கொன்று தொடர்பில் விசாரணை மேற்கொள்ள டுபாய் பொலிஸாருக்கு 6 மாதத்துக்கு குறையாத காலம் தேவைப்படுவதாக டிடேன் அமைப்பு கூறியுள்ளது.

அரபு மொழியில் எழுதப்படும் வாக்குமூலம், சாட்சிகள் என்பவற்றுக்கு பலவந்தமாக கையொப்பம் பெற்றுக் கொள்வதாகவும் டுபாய் பொலிஸார் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும் டிடேன் இன் டுபாய் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Previous Post

யாழ்ப்பாணம் அராலி வீதி காக்கதீவுப் பகுதியில் நடந்த சம்பவம்

Next Post

அதிகளவு வட்டிக்கு தடை ஏற்படுத்த நுண் கடன் சட்டம் தயார்

Next Post

அதிகளவு வட்டிக்கு தடை ஏற்படுத்த நுண் கடன் சட்டம் தயார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures