Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வணிகச் செயற்பாடுகளை ஊக்குவிக்க ரணில் விக்ரமசிங்க வடக்கிற்கு விஜயம்

February 14, 2019
in News, Politics, World
0

வடக்கின் வணிகச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கிற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

அதன்படி இன்று (வியாழக்கிழமை) அவர் வடக்கிற்கு பயணமாகின்றார்.

இந்த விஜயத்தின்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டம், பலாலி விமான நிலைய அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்காக, நிலங்களை சுவீகரிக்கவும், உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதற்கான திட்டத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் அமைச்சரவையில் முன்வைத்திருந்தார்.

அதன்படி வடக்கின் வணிகச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, அமைச்சரவை; அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஐக்கிய தேசிய முன்னணியின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படும்

Next Post

கிளிநொச்சி வெள்ளப்பெருக்கு யார்காரணம் அறிக்கை வெளியானது

Next Post

கிளிநொச்சி வெள்ளப்பெருக்கு யார்காரணம் அறிக்கை வெளியானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures