தினசரி சுங்கத்தினால் விடுவிக்கப்படும் கொள்கலன்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 90 சதவீதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுங்க தொழிற்சங்கம் தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு 1500 க்கும் 2000 க்கும் இடையில் கொள்கலன்கள் துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்படும் நிலையில் , தற்போதைய நிலையில் அது 100க்கும் 200க்கும் இடையில் வரை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தமது தொழிற்சங்க போராட்டத்தை வேலைநிறுத்த போராட்டமாக முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சுங்க ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

