தேசிய பிரச்சினைகளை தீர்க்க தேசிய அரசாங்கம் வேண்டும் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை மீண்டும் அமைக்க முடியுமென்றால் அதனை நாம் வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைக்கவும் அதில் ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையுடன் இணைந்து சகல தரப்பையும் இணைந்துக்கொண்டு பயணிக்க தயார் என ஐக்கிய தேசிய கட்சியில் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நகர்வுகள் என்ன என்பது குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தேசிய அரசாங்கத்தில் இணைவது குறித்த எந்தவித பேச்சுவார்த்தைகளையும் எம்முடன் முன்னெடுக்கவில்லை. அத்துடன் பேச்சுவார்த்தைக்கு நாம் தயாராகவும் இல்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

