கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்றிரவு உரிய அனுமதியின்றி கட்டுநாயக்க அதி பாதுகாப்பு எல்லையான விமான நிலையத்தில் ட்ரோன் கமராவில் வீடியோ எடுத்த போது இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மாலைதீவு நாட்டவர்கள் என குறிப்பிடப்படுகின்றது. அவர்களில் 3 ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 19 மற்றும் 23 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

