பிரியா பிரகாஷ் வாரியர், ஒரே ஒரு கண்ணடித்தலில் இந்திய அளவில் புகழைப் பெற்றவர். அவர் நடித்துள்ள ‘ஒரு அடார் லவ்’ படம் தெலுங்கு, தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது. தெலுங்கில் ‘லவர்ஸ் டே’ என்ற பெயரில் வெளியாக உள்ள இப்படத்தின் பிரமோஷன் நிகழ்வு இரு தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நடைபெற்றது.
அப்போது, பிரியாவின் அழகோ, சிரிப்போ, அவரின் கண் சிமிட்டலோ புகைப்படக் கலைஞர்களைக் கவரவில்லை. மாறாக, அவரது இடது மார்புக்கு மேல் பகுதியில் அவர் வரைந்து வைத்துள்ள ‘டாட்டூ’தான் பலரையும் பார்க்க வைத்தது.
‘கார்ப் டயம்’ என கையால் எழுதியதைப் போன்ற அந்த டாட்டூ ஒரு லத்தீன் சொற்றொடர் ஆகும். அதற்கு, “எதிர்காலத்தைப் பற்றிய கவலை இல்லாமல், இப்போதைய கணத்தின் இன்பத்தை அனுபவியுங்கள்” என்று அர்த்தம் ஆகும்.
இப்போது மகிழ்ச்சியாக இருங்கள் என்று பிரியா சொல்வது சரியானதுதான், ஆனால், அவர் டாட்டூ வரைந்திருக்கும் இடம்தான் தவறான இடமோ என எண்ணத் தோன்றுகிறது.

