நடிகர்கள் மட்டும்தான் தங்களது உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி செய்ய வேண்டுமா என்ன ?. இந்தக் கால நடிகைகளும் தங்களது உடலை மிகவும் கவனத்துடன் கட்டுக் கோப்பாக வைத்து வருகிறார்கள். அதற்காக பலரும் தீவிர உடற்பயிற்சியில் இருக்கிறார்கள்.
நடிகை சமந்தா திருமணம் ஆன பின்னும், திருமணமாகாத இளம் பெண் எப்படி இருப்பாரோ அப்படியே தன் உடலை உடற்பயிற்சி மூலம் தக்க வைத்து வருகிறார். அடிக்கடி தன்னுடைய உடற்பயிற்சி புகைப்படங்களை பதிவிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்துவது சமந்தா வழக்கம்.
நேற்று ‘கார்ட் வீல்’ செய்ய பயிற்சி எடுப்பதாக புகைப்படத்துடன் ஒரு பதிவிட்டுள்ளார். ‘கார்ட் வீல்’ என்பது இரண்டு கைகளையும் தலையில் அடுத்தடுத்து ஊன்றி பல்டி அடிப்பது போன்ற உடற்பயிற்சி ஆகும். அதை அவ்வளவு எளிதில் செய்ய முடியாது. அந்தப் பயிற்சியை இப்போது சமந்தா செய்து வருகிறார்.
சமந்தா நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ அடுத்து தமிழில் வெளிவர உள்ளது. வேறு எந்த புதிய தமிழ்ப் படத்திலும் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகவில்லை.

