இயக்குனர் ராம் டைரக்சனில் மம்முட்டி நடித்துள்ள படம் பேரன்பு.. அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு அருமையான படம் என்கிற பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளது. இந்த நிலையில் பேரன்பு படத்தை வரும் பிப்ரவரி 1-ம் தேதி ரிலீஸ் செய்கிறார்கள்.
இதுகுறித்து இயக்குனர் ராம் பேசும்போது : 1991ல் மலையாளத்தில் வெளியான அமரம் படத்தை பார்த்தே தான் மம்முட்டியின் தீவிர ரசிகனாக மாறியதாக கூறியுள்ளார். பரதன் இயக்கிய அந்த படம் மம்முட்டிக்கு மிகச்சிறந்த நடிகர் என நிறைய விருதுகளை பெற்றுத் தந்தது. மேலும் அந்தப்படம் அந்த வருடத்தின் பிப்ரவரி 1ஆம் தேதி தான் ரிலீஸ் ஆனது.. அதேபோல பேரன்பு படமும் அதே பிப்ரவரி 1ஆம் தேதி ரிலீஸாவது மகிழ்ச்சியளிப்பதாகவும் ராம் கூறியுள்ளார்.

